40 ஆண்டுகளாக நாட்டிற்காக மகத்தானச் சேவையை வழங்கி வந்த இந்தியக் கடற்படைக் கப்பல்களான சீட்டா, குல்தார் மற்றும் கும்பீர் ஆகியவை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று படையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
சீட்டா, குல்தார் மற்றும் கும்பீர் ஆகியவை போலந்தின் க்டினியா கப்பல் கட்டும் தளத்தில் போல்னோக்னி ரக தரையிறங்கும் வகை கப்பல்களாக கட்டமைக்கப்பட்டன.
அவை முறையே 1984, 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் இந்தியக் கடற்படையில் இணைக்கப் பட்டன.