இந்தியக் கடற்படையானது, INS ஜடாயு கடற்படைத் தளத்தினை லட்சத்தீவுகளில் உள்ள மினிகாய் தீவில் நிறுவி இயக்கத் தொடங்கியுள்ளது.
கவராத்தியில் உள்ள INS த்வீப் ரக்சக்கிற்குப் பிறகு லட்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது தளம் இதுவாகும்.
INS ஜடாயு, ஒன்பது பாகை கோட்டு நீரிணை மற்றும் முக்கியமான கடல் பாதைகளுக்கு அருகில் உள்ள உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த வகையில் அமைந்துள்ள தீவுகளில் இந்தியாவின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நிலையை வலுப்படுத்துவதற்கான ஒரு கட்ட வாரியான விரிவாக்கத் திட்டத்தின் தொடக்கமாகும்.
மேலும் இந்தியக் கடற்படையானது, ‘சீஹாக்ஸ்’ எனப்படும் தனது முதலாவது MH-60R என்ற பல்பயன்பாட்டு ஹெலிகாப்டர் (INAS 334) படைப் பிரிவினைக் கொச்சியில் உள்ள படையில் இணைத்தது.