இந்தியாவின் கடற்படையில் சமீபத்தில் புதிதாக இணைக்கப்பட்ட INS துஷில் என்ற கப்பலானது, ரஷ்யாவின் பால்டியிஸ்க் கடற்படைத் தளத்தில் தனது கடல்சார் இயக்க சோதனைகளைத் தொடங்கியது.
துஷில், ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட இரண்டு கூடுதல் கிரிவாக்/தல்வார் ரக ரேடார் கருவிகளில் சிக்காத போர்க் கப்பல்களில் முதலாவது கப்பலாகும்.
துஷில் என்றால் சமஸ்கிருத மொழியில் "பாதுகாப்பு கவசம்" என்று பொருள்படும் இது ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்காக இந்திய அரசினால் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்ட தொடர் உற்பத்தி செய்யப்படும் நான்கு போர்க் கப்பல்களில் ஒன்றாகும்.
இவற்றில் இரண்டு கப்பல்களானவை (INS துஷில் மற்றும் INS தமாலா) ரஷ்யாவால் வடிவமைக்கப் பட்டு வருகின்ற நிலையில் மீதமுள்ள இரண்டு கப்பல்களும் தொழில் நுட்பப் பரிமாற்றம் மூலம் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தியக் கடற்படையானது ஆறு தல்வார் ரக போர்க் கப்பல்களை இயக்குகிற நிலையில் இவை 1997 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் முறையே மூன்று கப்பல்கள் கொண்ட இரண்டு தொகுதிகளாக கொள்முதல் செய்யப் பட்டன.