TNPSC Thervupettagam
April 6 , 2024 235 days 258 0
  • இந்தியாவின் கடற்படையில் சமீபத்தில் புதிதாக இணைக்கப்பட்ட INS துஷில் என்ற கப்பலானது, ரஷ்யாவின் பால்டியிஸ்க் கடற்படைத் தளத்தில் தனது கடல்சார் இயக்க சோதனைகளைத் தொடங்கியது.
  • துஷில், ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட இரண்டு கூடுதல் கிரிவாக்/தல்வார் ரக ரேடார் கருவிகளில் சிக்காத போர்க் கப்பல்களில் முதலாவது கப்பலாகும்.
  • துஷில் என்றால் சமஸ்கிருத மொழியில் "பாதுகாப்பு கவசம்" என்று பொருள்படும் இது ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்காக இந்திய அரசினால் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்ட தொடர் உற்பத்தி செய்யப்படும் நான்கு போர்க் கப்பல்களில் ஒன்றாகும்.
  • இவற்றில் இரண்டு கப்பல்களானவை (INS துஷில் மற்றும் INS தமாலா) ரஷ்யாவால் வடிவமைக்கப் பட்டு வருகின்ற நிலையில் மீதமுள்ள இரண்டு கப்பல்களும் தொழில் நுட்பப் பரிமாற்றம் மூலம் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
  • இந்தியக் கடற்படையானது ஆறு தல்வார் ரக போர்க் கப்பல்களை இயக்குகிற நிலையில் இவை 1997 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் முறையே மூன்று கப்பல்கள் கொண்ட இரண்டு தொகுதிகளாக கொள்முதல் செய்யப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்