TNPSC Thervupettagam
October 27 , 2018 2124 days 645 0
  • இந்திய தேசிய அறிவியல் நிறுவனமானது (Indian National Science Academy - INSA) பெருமைமிகு இந்திய தேசிய அறிவியல் நிறுவனத்தின் 2018ம் ஆண்டிற்கான ஆசிரியர்கள் விருதிற்கு தேஜ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆசிஷ் முகர்ஜியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றது.
  • இவர் மாணவர்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தொழில் புரிபவர்களாக ஈடுபாடு கொண்டிட ஏற்படுத்திய வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காகவும் தனது சீரான மற்றும் உயர்தர ஆசிரியப் பணிக்காகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார்.
  • 2018 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் நடைபெறும் இந்திய தேசிய அறிவியல் நிறுவனத்தின் பொதுக் கூட்டத்தில் அவர் விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்.
  • புதுதில்லியில் உள்ள இந்திய தேசிய அறிவியல் நிறவனத்தால் நிறுவப்பட்ட இந்த விருதானது நாட்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் ஆசிரியர்களுக்கான அதிகபட்ச அங்கீகாரங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்