TNPSC Thervupettagam
February 22 , 2024 148 days 291 0
  • INSAT-3D வானிலை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் GSLV-F14 ஏவு கலமானது, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து மிகவும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
  • INSAT-3DS செயற்கைக்கோள் என்பது புவிநிலைச் சுற்றுப்பாதையில் இருந்து இயங்கும் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த வானிலை செயற்கைக்கோளை அடுத்து அனுப்பப்பட்ட செயற்கைக் கோளாகும்.
  • இது மேம்பட்ட வானிலை ஆய்வு கண்காணிப்புகள், வானிலை முன்னறிவிப்புக்காக நிலம் மற்றும் கடல் மேற்பரப்புகளைக் கண்காணித்தல் மற்றும் பேரழிவு முன்னெச்சரிக்கைக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும்.
  • INSAT-3DS செயற்கைக்கோள் ஆனது தற்போது சுற்றுவட்டப் பாதையில் செயல்பட்டு வரும் INSAT-3D மற்றும் INSAT-3DR செயற்கைக்கோள்களுடன் இணைந்து வானிலை ஆய்வுத் திறனை அதிகரிக்கும்.
  • GSLV-MkII எனப்படும் அதி திறன் ஏவு கலத்தினால் விண்ணில் ஏவப்படும் 16வது ஆய்வுக் கலமான இது 2001 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
  • முந்தைய 15 ஆய்வுப் பயணங்களில், 11 வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
  • GSLV ஏவு கலமானது, கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தோல்விகளால் இந்திய விண்வெளித் துறையில் "naughty boy” என்று அழைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்