TNPSC Thervupettagam
September 23 , 2022 669 days 468 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது சமீபத்தில் INSPIRE திட்டத்தின் கீழ் சுமார் 53,000 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது.
  • INSPIRE என்பது The Innovation in Science Pursuit for Inspired Research என்பதன் பெயர் சுருக்கம் ஆகும்.
  • இது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் செயல் படுத்தப் பட்டுள்ளது.
  • இது மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.
    • திறமையை முன்கூட்டியே ஊக்கப்படுத்துவதற்கானத் திட்டம் (SEATS),
    • உயர் கல்விக்கான உதவித் தொகை (SHE) மற்றும்
    • ஆராய்ச்சிப் பணிகளுக்கான உறுதியான வாய்ப்பு (AORC).
  • ஒவ்வோர் ஆண்டும் SEAT திட்டத்தின் கீழ் இந்திய அரசு INSPIRE விருது - MANAK விருதுகளை வழங்குகிறது.
  • MANAK என்பது தேசிய இலட்சியங்கள் மற்றும் அறிவுகளை மிகைப்படுத்துவதற்கான மில்லியன் மைண்ட்ஸ் திட்டம் என்பதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்