ஆற்றல் செயல்திறனில் ஆராய்ச்சி மற்றும் படைப்பாக்கத்திற்கான சர்வதேச கருத்தரங்கின் (International Symposium to Promote Innovation & Research in Energy Efficiency-INSPIRE 2017) முதலாவது பதிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கியுள்ளது.
செயல்திறனுடைய ஆற்றல் பொருளாதார நாடுகளின் கூட்டணி (Alliance for an Energy Efficient Economy -AEEE)) மற்றும் உலக வங்கியோடு இணைந்து ஆற்றல் செயல்திறன் சேவைகள் நிறுவனமானது (Energy Efficiency Services Limited-EESL) இந்த ஐந்து நாள் கருத்தரங்கினை நடத்துகின்றது.
ஆற்றல் செயல்திறன் கொள்கைகள், சந்தை மாற்ற உத்திகள், வளரும் ஆற்றல் தொழில்நுட்பங்கள், ஆற்றல் விநியோகம், வர்த்தக மாதிரி வழியிலான மாற்றம் போன்ற பல்வேறு தலைப்புகளில் ஆற்றல் செயல்திறன் துறைசார்ந்த பல்வேறு பங்குதாரர்கள் விவாதிப்பதற்கும், அத்துறையின் சிறந்த நடவடிக்கைகளை வெளிக்காட்டுவதற்கும் ஓர் மேடையாக இக்கருத்தரங்கம் நடத்தப்படுகின்றது.