சர்வதேச வடக்கு-தெற்குப் போக்குவரத்து வழித்தடத்தின் (INSTC) வழியாக நிலக்கரி ஏற்றப் பட்ட முதல் இரண்டு இரயில்களை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளதாக ரஷ்யாவின் தேசிய இரயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் முறையாக, குஸ்பாஸ் நிலக்கரி ஏற்றப்பட்ட முதல் இரண்டு இரயில்கள் சர்வதேச வடக்கு-தெற்குப் போக்குவரத்து வழித் தடத்தில் இந்தியாவை நோக்கிப் பயணிக்கின்றன.
கெமரோவோ பகுதியில் இருந்து இந்த இரயில்கள் புறப்பட்டுள்ளன.
அவை கஜகஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் வழியாக INSTC வழித்தடத்தின் கிழக்குக் கிளை வழியாக ஈரானியத் துறைமுகமான பந்தர் அப்பாஸ் வரையில் பயணித்தன.
INSTC என்பது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற ஒரு பகுதியினை இந்தியாவின் மும்பை துறைமுகத்துடன் இணைக்கும் 7,200 கிலோமீட்டர்கள் (4,500 மைல்கள்) நீளம் கொண்ட பல் முனை வழித்தடம் ஆகும்.
இது இரயில்வே, சாலை வலையமைப்பு மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றினை உள்ளடக்கியது.
ஆரம்பத்தில் NSTC திட்டம் என்று அழைக்கப்பட்ட இந்த INSTC ஒப்பந்தமானது 2002 ஆம் ஆண்டில் ரஷ்யா, ஈரான் மற்றும் இந்தியாவினால் கையெழுத்திடப்பட்டதையடுத்து, அவை அதன் ஸ்தாபன உறுப்பினர்களாக உள்ளன.