TNPSC Thervupettagam

INSTC - முதல் ஏற்றுமதி

July 4 , 2024 15 days 123 0
  • சர்வதேச வடக்கு-தெற்குப் போக்குவரத்து வழித்தடத்தின் (INSTC) வழியாக நிலக்கரி ஏற்றப் பட்ட முதல் இரண்டு இரயில்களை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளதாக ரஷ்யாவின் தேசிய இரயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது.
  • முதல் முறையாக, குஸ்பாஸ் நிலக்கரி ஏற்றப்பட்ட முதல் இரண்டு இரயில்கள் சர்வதேச வடக்கு-தெற்குப் போக்குவரத்து வழித் தடத்தில் இந்தியாவை நோக்கிப் பயணிக்கின்றன.
  • கெமரோவோ பகுதியில் இருந்து இந்த இரயில்கள் புறப்பட்டுள்ளன.
  • அவை கஜகஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் வழியாக INSTC வழித்தடத்தின் கிழக்குக் கிளை வழியாக ஈரானியத் துறைமுகமான பந்தர் அப்பாஸ் வரையில் பயணித்தன.
  • INSTC என்பது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற ஒரு பகுதியினை இந்தியாவின் மும்பை துறைமுகத்துடன் இணைக்கும் 7,200 கிலோமீட்டர்கள் (4,500 மைல்கள்) நீளம் கொண்ட பல் முனை வழித்தடம் ஆகும்.
  • இது இரயில்வே, சாலை வலையமைப்பு மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றினை உள்ளடக்கியது.
  • ஆரம்பத்தில் NSTC திட்டம் என்று அழைக்கப்பட்ட இந்த INSTC  ஒப்பந்தமானது 2002 ஆம் ஆண்டில் ரஷ்யா, ஈரான் மற்றும் இந்தியாவினால் கையெழுத்திடப்பட்டதையடுத்து, அவை அதன் ஸ்தாபன உறுப்பினர்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்