ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளை மடை மாற்றுவதற்காக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று அரசுகளின் ஒரு திட்டமே “வர்த்தக பரிமாற்றங்களுக்கான ஆதரவுத் தொழில்நுட்பம்” (Instrument in Support of Trade Exchanges - INSTEX) ஆகும்.
வாஷிங்டனின் தடைகள் மறுபடியும் விதிக்கப்பட்ட போதிலும் ஈரானை ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களோடு வர்த்தகம் செய்வதைத் தக்க வைக்க அனுமதிப்பதன் மூலம் ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்க உதவும் ஒரு சிறப்பு பணமளிப்பு முறையே இத்திட்டமாகும்.
இத்திட்டம் ஈரானுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் இறக்குமதிக்கான கட்டணங்களை தள்ளுபடிச் சலுகைகளாகவோ அல்லது வர்த்தகத்தில் அனுமதிக்கப்பட்ட பொருட்களான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மூலமாகவோ பெற்றுக் கொள்ள ஈரானை அனுமதிக்கும்.
இதன் விளைவாக ஈரானிற்கும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் நேரடி பணப் பரிமாற்றங்கள் எதுவும் நடைபெறாது.
இது தொழில்நுட்ப ரீதியாக ஐரோப்பிய நிறுவனங்களை அமெரிக்கத் தடைகளிலிருந்துப் பாதுகாக்கும்.