TNPSC Thervupettagam

INSTEX - ஈரானுடனான வர்த்தகம்

December 5 , 2019 1724 days 633 0
  • பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் சமீபத்தில் INSTEX ல் இணைந்துள்ளன.
  • ஈரானுடனான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு (தொடருவதற்கு) ஐரோப்பிய நிறுவனங்களை அனுமதிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளால் ‘வர்த்தகப் பரிமாற்றங்களுக்கு ஆதரவான கருவி (INSTEX - Instrument in Support of Trade Exchanges)’ என்ற வர்த்தக வழிமுறை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
  • டாலரின் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் ஈரானுடனான வர்த்தகத்திற்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக இந்த வழிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பாரிஸைத் தலைமையாகக் கொண்ட இந்த வழிமுறையானது ஒரு தீர்வு காணும் இடமாக செயல்படுகின்றது.
  • இது தொடர்ந்து எண்ணெய் வகைகளை விற்பனை செய்யவும், பரிமாற்றத்தின் போது பிற தயாரிப்புகள் அல்லது சேவைகளை இறக்குமதி செய்யவும் ஈரானை அனுமதிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்