TNPSC Thervupettagam

IOA தடகள ஆணைய உறுப்பினர்

November 22 , 2022 605 days 322 0
  • ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற எம்.சி.மேரி கோம், பி.வி.சிந்து, மீராபாய் சானு மற்றும் ககன் நரங் உட்பட 10 சிறந்த விளையாட்டு வீரர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தடகள ஆணையத்தின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • இந்த ஆணையத்தின் தலைவராக ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மேரி கோம் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் அச்சந்தா சரத் கமல் இந்த அமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய சாசனத்தின் படி, விளையாட்டு வீரர்கள் ஆணையத்தில் ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.
  • தடகள ஆணையத்தின் உடனடிப் பணியானது, ஐஓஏவின் பொதுச் சபையில் வாக்களிக்கும் உறுப்பினர்களாக இருக்க வேண்டி, சிறந்த திறமை கொண்ட எட்டு விளையாட்டு வீரர்களை அடையாளம் காண்பதாகும்.
  • ஒலிம்பிக் போட்டிகள், ஆசிய விளையாட்டுக்கள் மற்றும் பிற சர்வதேச தடகள விளையாட்டுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புடைய அமைப்பு இந்த இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்