சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தடகள வீரர்கள் ஆணையமானது இங்கிலாந்தைச் சேர்ந்த பனித்தள ஹாக்கி வீரரான எம்மா டெர்ஹோவினை (Emma Terho) அதன் தலைவராக மீண்டும் தேர்வு செய்துள்ளது.
இவர் 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் வரையில் இந்த ஆணையத்தின் தலைவராக பணியாற்றுவார்.
இந்த ஆணையமானது, கொரியக் குடியரசினைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான சியோங்மின் ரியூவினை தனது முதலாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து உள்ளது.
மேலும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த சைக்கிள் ஓட்டும் வீரரான சாரா வால்கடிரை ஆணையத்தின் 2வது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.