சசி ஷங்கர் என்பவருக்கு 2019 ஆம் ஆண்டில் இயக்குநர்கள் நிறுவனத்தின் (The Institute of Directors - IOD) புகழ்பெற்ற தோழமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (Oil and Natural Gas Corporation - ONGC) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஷங்கர் ஆவார்.
இயக்குநர்கள் நிறுவனத்தின் 29வது ஆண்டு விழாவின் போது இந்த விருது வழங்கப்பட்டது.
பெருநிறுவன வாரியங்களில் உள்ள இயக்குநர்களுக்கு IOD ஆனது பயிற்சி அளிக்கின்றது. இது 15 வெவ்வேறு பெருநிறுவன செயல்பாடுகளுக்காக பெருநிறுவனங்களுக்குத் தங்க மயில் விருதுகளை வழங்குகின்றது.
2019 ஆம் ஆண்டின் கருத்துரு - 'எதிர்கால வாரியங்கள்: நிலைத் தன்மையைத் தழுவுவதற்கான சிறந்த உத்தி' என்பதாகும்.