TNPSC Thervupettagam

IoT சாதனங்களுக்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நுண் செயலி

September 29 , 2020 1429 days 553 0
  • மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது இணையப் பொருட்கள் சாதனங்களுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நுண்செயலியான மௌசிக்என்ற ஒன்றை வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளது.
  • இது டிஜிட்டல் நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பான வன்பொருள் கட்டமைப்பிற்கான பிரதாப் சுப்பிரமணியம் மையத்தில் கருத்தாக்கம் செய்யப்பட்டு, வடிவமைக்கப் பட்டு, மேம்படுத்தப்பட்டு உள்ளது.
  • இந்த நுண்செயலி உருவாக்கத்தில் வடிவமைப்பு, கட்டுருவாக்கம் மற்றும் பிந்தைய சிலிகான் பொருத்துதல் (design, fabrication and post-silicon boot-up) ஆகிய 3 படிநிலைகள் உள்ளன.
  • இந்தத் திட்டமானது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிதியளிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்