IoT சாதனங்களுக்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நுண் செயலி
September 29 , 2020 1522 days 594 0
மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது இணையப் பொருட்கள் சாதனங்களுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நுண்செயலியான “மௌசிக்” என்ற ஒன்றை வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளது.
இது டிஜிட்டல் நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பான வன்பொருள் கட்டமைப்பிற்கான பிரதாப் சுப்பிரமணியம் மையத்தில் கருத்தாக்கம் செய்யப்பட்டு, வடிவமைக்கப் பட்டு, மேம்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நுண்செயலி உருவாக்கத்தில் வடிவமைப்பு, கட்டுருவாக்கம் மற்றும் பிந்தைய சிலிகான் பொருத்துதல் (design, fabrication and post-silicon boot-up) ஆகிய 3 படிநிலைகள் உள்ளன.
இந்தத் திட்டமானது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிதியளிக்கப் பட்டது.