இந்தியப் பெருங்கடல் “அலை” (Indian Ocean Wave - IOWave) பயிற்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்வரும் நிறுவனங்களின் ஒத்துழைப்பாலும் ஒருங்கிணைப்பாலும் நடத்தப் படுகின்றன.
யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான கடலியல் ஆணையம்,
இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பின் அரசுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு ஆணையம் மற்றும்
இந்தியப் பெருங்கடல் தகவல் மையம்.
இந்திய சுனாமி முன் எச்சரிக்கை மையமானது இந்தப் பயிற்சியில் இந்தியாவின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையமாகவும், முழு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்குமான சுனாமி சேவை வழங்குநராகவும் பங்கேற்றது.