பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) ஆனது ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் (AR6) தொகுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற ஒரு வரம்பைத் தாண்டுவதைத் தடுப்பதற்கான ஒரு அவசரத் தேவையை இது எடுத்துரைக்கிறது.
1901 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகளாவியச் சராசரி கடல் மட்டம் ஆனது 0.20 மீட்டர் அதிகரித்துள்ளது.
மனித நடவடிக்கைகளின் தாக்கமானது 1950 ஆம் ஆண்டுகளில் இருந்து, பல்வேறு தீவிர நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளது.
அடுத்தடுத்த வெப்ப அலைகள் மற்றும் வறட்சிகள் ஆகியவை மீண்டும் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதும் இதில் அடங்கும்.
ஏறத்தாழ 3.3 - 3.6 பில்லியன் மக்கள் பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப் படக் கூடிய சூழல்களில் வாழ்கின்றனர்.
2010 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், வெள்ளம், வறட்சி மற்றும் புயல்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் ஆனது, மிகவும் குறைவானப் பாதிப்பு உள்ள பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பாதிக்கப் படக்கூடிய பகுதிகளில் 15 மடங்கு அதிகமாக இருந்தது.