TNPSC Thervupettagam

IPCC மதிப்பீட்டு அறிக்கை

March 3 , 2022 872 days 492 0
  • ஒருவேளை பசுமை இல்ல வாயுவின் உமிழ்வு குறைந்தாலும், அடுத்த 20 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தினால் பல்வேறு இடர்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
  • பருவநிலை மாற்றம் மீதான அரசுகளுக்கிடையிலான குழு (Intergovermental Panel on Climate Change – IPCC) தொகுத்த ஒரு அறிக்கையில் இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.
  • IPCCயின் 2வது அறிக்கையின்படி, இந்த உமிழ்வுக் குறைக்கப்படா விட்டால் இந்தியா மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
  • கடல்மட்ட உயர்வு மும்பை நகரத்திற்கு மிகுந்த  ஆபத்தை விளைவிக்கும் என்றும், புயல் உருவாதல் கொல்கத்தா நகரத்திற்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவின் அரிசி உற்பத்தி 10 முதல் 30% வரையிலும், சோள உற்பத்தி 25 முதல் 70% வரையிலும் குறையலாம் எனவும், வெப்பநிலை 1 முதல் 4°C வரை உயரலாம் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.
  • சிந்து, அமு தார்யா, சபர்மதி, கங்கை ஆகிய ஆற்றுப் படுகைகள் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என இந்த அறிக்கை கூறுகிறது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்