செழுமைக்கான இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (IPEF) அமைச்சர்கள் கூட்டம் ஆனது சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது.
இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட IPEF அமைப்பின் உறுப்பினர் நாடுகள் தூய மற்றும் நியாயமான பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளன.
அவை பயன்மிக்க ஊழல் எதிர்ப்பு மற்றும் வரி நடவடிக்கைகளை வலுப்படுத்தச் செய்வதையும் நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதையும் பெரும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
IPEF அமைப்பானது, அமெரிக்கா மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் மற்றப் பங்கு தார நாடுகளால் இணைந்து 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.