IPES-உணவு (நிலையான உணவு முறைகள் குறித்த சர்வதேச நிபுணர் குழு) அமைப்பானது ஒரு சிறப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 60% நாடுகள் தற்போது, அதிக கடன் நெருக்கடி ஆபத்தில் இருப்பதாக அல்லது ஏற்கனவே கடன் நெருக்கடியில் இருப்பதாக கருதப் படுகிறது.
சுமார் 21 நாடுகள் கடன் நெருக்கடி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை ஆகிய இரண்டின் பேரழிவு நிலைகளை நெருங்கி வருகின்றன.
ஜாம்பியா, இலங்கை மற்றும் சுரினாம் ஆகியவை ஏற்கனவே தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளன.
கானா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த நிலையினைத் தவிர்ப்பதற்காக தற்போது அவசரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகள் தங்களது கடனைச் செலுத்துவதற்கான செலவினங்களில் 35% அதிகரித்துள்ளது.
அந்த நாடுகள் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளில் 47 சதவீதத்தினைத் தனியார் கடன் நிறுவனங்களுக்கும், 12% சீனாவிற்கும், 14% மற்ற அரசாங்கங்களுக்கும் மற்றும் மீத அளவினைச் சர்வதேச நாணய நிதியம் போன்ற பலதரப்பு நிறுவனங்களுக்கும் செலுத்தியுள்ளன.
பல நாடுகள் தற்போது ‘உரங்கள் சூழ்ச்சி’ என்று கூறப்படும் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றன.
இந்தியா, கென்யா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் எரிபொருள் இறக்குமதி செலவுகள் அதிகரித்து வருகின்ற நிலையில், நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், உர மானியங்களை அதிகரித்து வரும் அரசுகளாகும்.