TNPSC Thervupettagam

IPES-உணவு அமைப்பின் சிறப்பு அறிக்கை

March 17 , 2023 619 days 298 0
  • IPES-உணவு (நிலையான உணவு முறைகள் குறித்த சர்வதேச நிபுணர் குழு) அமைப்பானது ஒரு சிறப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 60% நாடுகள் தற்போது, அதிக கடன் நெருக்கடி ஆபத்தில் இருப்பதாக அல்லது ஏற்கனவே கடன் நெருக்கடியில் இருப்பதாக  கருதப் படுகிறது.
  • சுமார் 21 நாடுகள் கடன் நெருக்கடி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை ஆகிய இரண்டின் பேரழிவு நிலைகளை நெருங்கி வருகின்றன.
  • ஜாம்பியா, இலங்கை மற்றும் சுரினாம் ஆகியவை ஏற்கனவே தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளன.
  • கானா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த நிலையினைத் தவிர்ப்பதற்காக தற்போது அவசரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகள் தங்களது கடனைச் செலுத்துவதற்கான செலவினங்களில் 35% அதிகரித்துள்ளது.
  • அந்த நாடுகள் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளில் 47 சதவீதத்தினைத் தனியார் கடன் நிறுவனங்களுக்கும், 12% சீனாவிற்கும், 14% மற்ற அரசாங்கங்களுக்கும் மற்றும் மீத அளவினைச் சர்வதேச நாணய நிதியம் போன்ற பலதரப்பு நிறுவனங்களுக்கும் செலுத்தியுள்ளன.
  • பல நாடுகள் தற்போது ‘உரங்கள் சூழ்ச்சி’ என்று கூறப்படும் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றன.
  • இந்தியா, கென்யா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் எரிபொருள் இறக்குமதி செலவுகள் அதிகரித்து வருகின்ற நிலையில், நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், உர மானியங்களை அதிகரித்து வரும் அரசுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்