TNPSC Thervupettagam

IQAir தரவுகள் - 2020 உலகக் காற்றுத் தரநிர்ணய அறிக்கை

November 25 , 2021 970 days 510 0
  • காற்றின் தரமானது pm2.5, pm10, ஓசோன், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றின் அளவை மதிப்பிடுவதன் மூலம் நிர்ணயிக்கப் படுகிறது.
  • 2020 ஆம் ஆண்டில்  உலகின் மிக மாசடைந்த 100 நகரங்களில் 46 நகரங்கள் இந்திய நகரங்களாகும்.
  • இந்தியாவைத் தொடர்ந்து சீனா (42 நகரங்களுடன்), பாகிஸ்தான் (6 நகரங்களுடன்), வங்காளதேசம் (4 நகரங்களுடன்) ஆகியவை உள்ளன.
  • உலகளவில் முன்னணியிலுள்ள மிகவும் மாசடைந்த 10 நகரங்களில் 9 இடங்களில் இந்திய நகரங்கள் உள்ளன.
  • அந்த 9 நகரங்கள் காசியாபாத், புலந்தர்ஷா, பிஸ்ராக் ஜலால்பூர், பிவடி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ மற்றும் டெல்லி ஆகியனவாகும்.
  • 2020 ஆம் ஆண்டில் தொடர்ந்து நேரடியாக மூன்றாவது ஆண்டாக புது தில்லி உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரமாக உள்ளது.
  • 20 முதல் 40 சதவிகிதம் வரையிலான அளவில் டெல்லியின் காற்று மாசுவானது தேசியத் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்தில் எரிக்கப் படும் பயிர்த் தாளடி எரிப்புகளில் இருந்து வருவதாக மதிப்பிடப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டில் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹோடான் நகரம் மிக மோசமான சராசரிக் காற்றுத் தரத்தைக் கொண்டிருந்தது.
  • IQAir என்பது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத்தர தொழில்நுட்ப நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்