TNPSC Thervupettagam

IqAir நிறுவனத்தின் காற்றுத் தரக் குறியீடு

February 18 , 2023 519 days 290 0
  • உலகளாவியக் காற்றுத் தரக் குறியீட்டில் (AQI), டெல்லி நகரினை விஞ்சி மும்பை நகரம் உலகின் இரண்டாவது மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது.
  • இது சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள IqAir எனப்படும் காற்றுத் தரக் கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
  • ஜனவரி 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 08 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், போஸ்னியாவில் உள்ள சர்ஜேவோ நகரமானது உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இதில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • இப்பட்டியலில் டெல்லி ஆறாவது இடத்திலும், கொல்கத்தா 17வது இடத்திலும் உள்ளன.
  • IQAir நிறுவனமானது ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) மற்றும் கிரீன்பீஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் காற்றின் தரத்தை மதிப்பிடுகிறது.
  • அதன் ஆய்வுகள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்