சுவிட்சர்லாந்து நாட்டின் காற்று சுத்திகரிப்பு நிறுவனமான IQAir இந்தத் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இந்தக் குறியீட்டில், 287 என்ற காற்றுத் தரக் குறியீடு (AQI) உடன் டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக இடம் பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து 195 என்ற மதிப்புடன் பாகிஸ்தானின் லாகூர் நகரம் உள்ளது.
153 என்ற மதிப்புடன் மும்பை நகரமும், 166 என்ற மதிப்புடன் கொல்கத்தா நகரமும் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
IQAir நிறுவனத்தின் AQI ஆனது 109 நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவை மதிப்பிடச் செய்வதோடு, இதில் ஒவ்வொரு மணி நேரமும் இந்த அளவீடுகள் மாறும்.
டெல்லியின் சில பகுதிகளில் நிலவும் காற்று மாசுபாடு ஆனது, உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த பாதுகாப்பான மாசுபாடு வரம்புகளை விட 30 மடங்கு அதிக மோசமாக இருந்தது.