உலகளாவியக் காற்றுத் தரக் குறியீட்டில் (AQI), டெல்லி நகரினை விஞ்சி மும்பை நகரம் உலகின் இரண்டாவது மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது.
இது சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள IqAir எனப்படும் காற்றுத் தரக் கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 08 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், போஸ்னியாவில் உள்ள சர்ஜேவோ நகரமானது உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
இதில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இப்பட்டியலில் டெல்லி ஆறாவது இடத்திலும், கொல்கத்தா 17வது இடத்திலும் உள்ளன.
IQAir நிறுவனமானது ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) மற்றும் கிரீன்பீஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் காற்றின் தரத்தை மதிப்பிடுகிறது.
அதன் ஆய்வுகள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப் படுகின்றன.