TNPSC Thervupettagam

IRDAI வருடாந்திர அறிக்கை 2022-23

January 2 , 2024 332 days 287 0
  • இந்தியாவில் 2021-22 ஆம் ஆண்டில் 34.7 சதவீதமாக இருந்த பெண்களுக்கு வழங்கப் படும் ஆயுள் காப்பீட்டுகளின் பங்கு 2022-23 ஆம் ஆண்டில் 34.2 சதவீதமாக குறைந்து உள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில், பெண்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுகளின் எண்ணிக்கையானது 97.38 லட்சத்தை எட்டியது.
  • இதே காலக் கட்டத்தில் மொத்தம் 2.84 கோடி காப்பீடுகள் விற்பனையாகியுள்ளன.
  • தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் 30.13 சதவீதப் பங்குடன் ஒப்பிடும் போது, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தினால் பெண்களுக்கு வழங்கப்படும் காப்பீடுகளின் பங்கு ஆனது 35.81% என்ற விகிதத்தில் அதிகமாக உள்ளது.
  • பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுள் காப்பீடுகளின் பங்கின் அடிப்படையில் கர்நாடகா (44.23 சதவீதம்), கேரளா (43.96 சதவீதம்), மிசோரம் (42.97 சதவீதம்), சிக்கிம் (42.6 சதவீதம்), மற்றும் மேகாலயா (41.81 சதவீதம்) ஆகியவை முன்னணியில் உள்ளன.
  • லடாக் (23.1 சதவீதம்), ஹரியானா (27.16 சதவீதம்), ஜம்மு & காஷ்மீர் (28.07 சதவீதம்), உத்தரப் பிரதேசம் (29.53 சதவீதம்), மற்றும் குஜராத் (29.59 சதவீதம்) ஆகியவை குறைவான சதவீதங்களைக் கொண்ட மாநிலங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்