இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆனது ஏப்ரல் 19 ஆம் தேதியன்று தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது.
மல்ஹோத்ரா குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு இணங்க, காப்பீட்டுத் துறையை ஒழுங்குபடுத்துவதற்காகவும் முன்னேற்றிக் கொண்டு செல்வதற்காகவும் 1999 ஆம் ஆண்டில் ஒரு தன்னாட்சி அமைப்பாக IRDAI ஆனது அமைக்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதியன்று, இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டது.
IRDAI இந்தியாவின் காப்பீட்டுச் சூழலை வடிவமைப்பதிலும் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட செயல்பாட்டினை மேம்படுத்துவத்திலும் முன்னணியில் உள்ளது.