சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் (IRENA), "ஆற்றல் மாற்றத்திற்கான உயிரி ஆற்றல்: நிலைத் தன்மையை உறுதி செய்தல் மற்றும் தடைகளைச் சமாளித்தல்" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது நிலையான உயிரி ஆற்றல் மேம்பாட்டின் நிலையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உயிரி ஆற்றல் என்பது நாம் உயிரி எரிபொருளை எரிக்கும் போது உருவாகும் புதுப்பிக்கத் தக்க ஆற்றலின் ஒரு வடிவமாகும்.
தற்போது உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நுகர்வில் மூன்றில் இரண்டு பங்கு உயிரி ஆற்றல் ஆகும்.
உயிரி ஆற்றல் ஆனது, பல்லுயிர் இழப்பு, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் காடழிப்பு போன்ற எதிர்மறையான சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.