IRIS2/ஐரிஸ்2 திரள் என்பது செயற்கைக்கோள் மூலமான நெகிழ்திறன், இடையிணைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான உள்கட்டமைப்பைக் குறிக்கிறது.
இது சுமார் 300 செயற்கைக் கோள்களைக் கொண்ட பல்சுற்றுப்பாதை தொகுதி ஆகும்.
அவை ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள், ஐரோப்பிய நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்காக நெகிழ்திறன் மிக்க மிகப் பாதுகாப்பான மற்றும் விரைவான தகவல் தொடர்புகளை வழங்கும்.
இது மிகப் பாதுகாப்பான அரசாங்க தகவல் தொடர்பு சேவைகளுக்கான தடையில்லா அணுகலை உறுதிசெய்து, உயர்தர வணிகச் சேவைகளை வழங்கும்.