இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (Indian Space Research Organisation-ISRO) ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து IRNSS-1I வழிகாட்டு ஏவுகணையை (navigation satellite) வெற்றிகரமாக ஏவியுள்ளது.
PSLV-C41 இராக்கெட் மூலம் IRNSS-1I செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.
இஸ்ரோ மையத்துடனான கூட்டிணைவோடு இணைந்து பெங்களூருவைச் சேர்ந்த ஆல்பா வடிவமைப்பு தொழிற்நுட்ப நிறுவனத்தினால் IRNSS-1I உருவாக்கப்பட்டது.
IRNSS-1I செயற்கைக் கோளானது ஒட்டுமொத்தமாக இஸ்ரோவின் நேவிக் வழிகாட்டு செயற்கைக் கோள் கூட்டமைவில் (NAVIC navigation satellite constellation) இணையும் எட்டாவது செயற்கைக் கோளாகும்.
IRNSS-1I செயற்கைக் கோளானது ஒட்டுமொத்தமாக இஸ்ரோவின் நேவிக் வழிகாட்டு செயற்கைக் கோள் கூட்டமைவில் (NAVIC navigation satellite constellation) இணையும் எட்டாவது செயற்கைக் கோளாகும்.
நேவிக் வழிகாட்டு செயற்கைக் கோள்கள் அமைப்பானது (NAVIC - Navigation with Indian Constellation) ஏழு செயற்கைக் கோள்களின் கூட்டமைப்பாகும்.
அவையாவன : IRNSS-1I, 1B, 1C, 1D, 1E, 1F and 1G. இவற்றுள் மூன்று செயற்கைக் கோள்கள் புவி நிலை வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக் கோள்களாகும். நான்கு செயற்கைக் கோள்கள் புவி நிலை அல்லாத வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் செயற்கை கோள்களாகும்.
IRNSS-1I செயற்கைக் கோளானது IRNSS-1A செயற்கைக் கோளுக்கு மாற்றாக அனுப்பப்பட்டுள்ளது. IRNSS தொடரின் ஏழு வழிகாட்டு செயற்கைக் கோள்களில் முதல் செயற்கைக் கோளான IRNSS-IA செயற்கைக் கோளின் மூன்று ருபிடியம் அணு கடிகாரங்களும் (rubidium atomic clocks) தோல்வியடைந்ததன் காரணமாக IRNSS-1A செயற்கைக் கோள் செயல்பாடற்ற நிலையில் உள்ளது.
IRNSS-1I செயற்கைக் கோளானது 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் புவியிணக்கச் சுற்றுவட்டப் பாதையில் (Geosynchronous Orbit) நிலைநிறுத்தப்படும்.