சர்வதேச அளவில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியும் (ISA – International Solar Alliance) மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஐரோப்பிய வங்கியும் (EBRD – European Bank for Reconstruction and Development) ஓர் கூட்டு இணைவு நிதியியல் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ISA மற்றும் EBRD-க்கு இடையேயான இக்கூட்டிணைவானது ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் மேற்கொள்ளப்படும் சூரிய ஆற்றல் திட்டங்களுக்கு நிதியியல் உதவிகளை மேற்கொள்ளும்.
போட்டித்திறனும், சிறப்பான நிர்வகிப்பும், பசுமையும், அதிக உள்ளடக்கமும்,நெகிழ்வுத்தன்மையும் ,அதிக ஒருங்கிணைப்பும் உடையவையாக உலக நாடுகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு தேர்வுக் காரணித் தொகுப்பின் அடிப்படையில் 3 கண்டங்களில் உள்ள 38 வளரும் பொருளாதார நாடுகளில் சூரிய ஆற்றல் திட்டங்களுக்கு EBRD முதலீடு செய்கின்றது.