சர்வதேச கடற்படுகை ஆணையம் (ISA) ஆனது அதன் 29வது அமர்வின் முதல் பகுதியை சமீபத்தில் ஜமைக்காவில் கிங்க்ஸ்டன் நகரத்தில் தொடங்கியது.
ISA என்பது, 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச தன்னாட்சி அமைப்பாகும்.
இது கடல்சார் சட்டம் மீதான 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் (UNCLOS) உடன்படிக்கை மற்றும் UNCLOS உடன்படிக்கையின் XI பகுதியினை செயல்படுத்துவது தொடர்பான 1994 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்பட்டது.
இது ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காக கடற்படுகையில் உள்ள அனைத்து கனிம வளங்கள் தொடர்பான செயல்பாடுகளையும் ஒழுங்குபடுத்தி, கட்டுப்பாட்டுச் செயல்முறைகளை மேற்கொள்கிறது.
கடற்படுகை மற்றும் கடற்பரப்பு மற்றும் அதன் அடிப்பகுதி ஆகியவை தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவையாகும்.