TNPSC Thervupettagam

ISCF & ISCI திட்டங்கள்

July 11 , 2018 2333 days 668 0
  • புதுப்பித்தல் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் (Atal Mission for Rejuvenation and Urban Transformation - AMRUT) மற்றும் பொலிவுறு நகரங்களுக்கான திட்டம் ஆகியவற்றின் கீழ் பல புதிய முயற்சிகளை வீடுகள் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • இந்திய பொலிவுறு நகரங்களுக்கான கூட்டுறவு திட்டம் (India Smart Cities Fellowship (ISCF) - Program);
  • இந்திய பொலிவுறு நகரங்களுக்கான உள்ளிருப்புப் பயிற்சி திட்டம் (India Smart Cities Internship (ISCI) - Program);
  • பொலிவுறு நகரங்களின் இலக்கமுறை பண வழங்கீடு விருதுகள் 2018 மற்றும்
  • ‘CITIIS’ பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் உள்ள சவால்கள்

இவையாவும் இத்திட்டத்தினுள் அடங்கும்.

  • மேலும் 25 நகரங்களில் உள்ளூர் பகுதித் திட்டம் (Local Area Plan - LAP) அல்லது நகர திட்டமிடுதல் திட்டம் (Town Planning Scheme - TPS) AMRUT-ன் கீழ் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தவுள்ளதை அவ்வமைச்சகம் அறிவித்துள்ளது.
  • LAP மற்றும் TPS ஆகியன பழுப்பு நிலப் பகுதிகள் (Brownfield) மற்றம் பசுமைநிலப் பகுதிகளில் (Greenfield) உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை இயலச் செய்வதற்கு AMRUT-ன் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும்.
  • பழுப்பு நிலப் பகுதிகள் ஏற்கனவே மேம்படுத்தப்பட்ட நகரங்களின் ஒரு பகுதியாகும். ஆனால் தற்போது இருக்கும் உள்கட்டமைப்பில் அழுத்தத்தினை தாங்க இயலாத பகுதிகள் ஆகும்.
  • மறுபுறம் பசுமை நிலப் பகுதிகள் நகரங்களின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளன. இவை எதிர்பாராது நிகழ்கிற வளர்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கு உள்ளாகும் இடங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்