ஆந்திரப் பிரதேசத்தின் நச்சுகுண்டா தீவுப் பகுதியினைச் சேர்ந்த தொழில்முறை சாரா வானொலியாளர்கள்-வணிக நோக்கமின்றி தனி நபர்களின் பெரு சொந்த முயற்சியால் ஒலிபரப்பப்படும் வானொலி - (HAMs) அடங்கிய ஒரு பிரத்தியேகக் குழுவானது, Island On The Air (IOTA) என்ற பயணத் திட்டத்தில் பங்கேற்பதற்காக தனது பயணத்தை மேற்கொண்டது.
இது 1964 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
இது உலகெங்கிலும் உள்ள தொழில்சாரா வானொலியாளர்களைத் தீவுகளில் உள்ள வானொலி நிலையங்களுடன் இணைக்கின்ற ஒரு முன்னோடித் திட்டமாகும்.
அமெச்சூர் வானொலி (தொழில்முறை சாரா வானொலி) என்பது வணிக நோக்கமின்றி வானொலி அலைக்கற்றை அலைவரிசையைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய ஒரு பிரபலமான பொழுதுபோக்குச் செயல்பாடு ஆகும்.
HAM வானொலியாளர்கள், போட்டிகள், அவசர தகவல் தொடர்பு ஆதரவு, பரிசோதனை, தொழில்நுட்பக் கற்றல் மற்றும் சமூக ஈடுபாடு போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சில குறிப்பிட்ட வானொலி அலைவரிசைகளைப் பயன்படுத்தி தொடர்பு கொள்கின்றனர்.