இரப்பர் வாரியம் ஆனது iSNR மற்றும் INR connect ஆகிய இரண்டு புதியத் திட்டங்களை அறிவித்துள்ளது.
1947 ஆம் ஆண்டு ரப்பர் சட்டத்தின் பவள விழாக் கொண்டாட்டங்களின் போது அவை வெளியிடப்பட்டன.
iSNR (இந்திய நிலையான இயற்கை இரப்பர்) இந்திய இரப்பர் உற்பத்தியை மிகவும் கடுமையான ஐரோப்பிய ஒன்றிய காடழிப்பு ஒழுங்குமுறை (EUDR) தரநிலைகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
iSNR திட்டத்தின் முக்கிய அம்சம் அதன் வகை கண்டறிதல் சான்றிதழ் ஆகும்.
INR connect என்பது தோட்ட உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக வேண்டி, வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படாத இரப்பர் மரங்களை வளர்ப்பவர்களை அதனை வாங்கி பராமரிக்க ஆர்வமுள்ளவர்களுடன் இணைப்பதற்காக என்று வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு வலையமைப்பு தளமாகும்.
தாய்லாந்து (1வது) மற்றும் இந்தோனேசியா (2வது) ஆகியவற்றைத் தொடர்ந்து, உலக அளவில் இயற்கை இரப்பரை உற்பத்தி செய்வதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இயற்கை இரப்பரை மிகவும் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் இயற்கை இரப்பர் உற்பத்தியில் கேரளா 90 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்கினை கொண்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, திரிபுரா, அசாம் மற்றும் மேகாலயா ஆகியவை மிக அதிகப் பங்கினை கொண்ட பிற மாநிலங்கள் ஆகும்.