ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDP) மற்றும் சர்வதேச தர நிலைப் படுத்தல் அமைப்பு ஆகியவை ‘ISO/UNDP PAS 53002’ தரவரிசையினை அறிமுகப் படுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கான பெரும் பங்களிப்புகளை துரிதப் படுத்துவதற்கான உலகின் முதல் சர்வதேச வழிகாட்டுதல் இதுவாகும்.
இது நிறுவனங்களுக்கு SDG இலக்குகளை அவற்றின் பல முக்கியச் செயல்பாடுகளில் வைப்பதற்கும் அவற்றின் நேர்மறையானத் தாக்கத்தை அதிகரிப்பதற்குமான மதிப்பு மிக்க ஆதாரத்தை வழங்குகிறது.