TNPSC Thervupettagam

ISRO - GSAT 6A செயற்கைக் கோள்

April 1 , 2018 2429 days 850 0
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO), தொலைத் தொடர்பு செயற்கைக்கோளான GSAT-6Aவை, GSLV-F08 ராக்கெட் மூலம் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • GSLV-F08 ராக்கெட்டானது இந்தியாவின் 12வது GSLV ராக்கெட் மற்றும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட 5வது ராக்கெட் ஆகும்.
  • GSAT - 6 ஆனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உயர்நிலை கிரையோஜெனிக் என்ஜினுடன் (Indigenously built Cryogenic upper stage engine) ஏவப்பட்டது.
  • GSAT-6A ஆனது ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட, உயர் ஆற்றல் S-பட்டை கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இச்செயற்கைக்கோள் புவிசுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
  • இது நாள் வரையிலான அளவில், GSAT-6A மட்டுமே ஆற்றல்மிக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு செயற்கைக் கோளாகும்.
  • GSAT-6A ஆனது GSAT-6ஐப் போன்றது. 2015ல் விண்ணில் ஏவப்பட்ட GSAT-6 ஆனது உயர் ஆற்றல் S-பட்டை கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக் கோளாகும்.
  • GSAT-6Aவின் S-பட்டையின் ஆன்டெனா, ISROவின் அகமதாபாத்திலுள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்