அரசு தொழிலாளர்கள் காப்பீட்டுக் கழகமானது தொழிலாளர்களின் காப்பீட்டு விரிவாக்கத்திற்கான நிர்வாக தீர்விற்காக ISSA-இன் நல்ல நடைமுறைகளுக்கான விருதினை வென்றுள்ளது.
இந்த விருதானது மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய மற்றும் பசுபிக் பகுதிக்கான பிராந்திய சமூகப் பாதுகாப்பு மன்றத்தில் வழங்கப்பட்டது.
இந்த விருதானது ESIC (Employees’ State Insurance Corporation) ஆல் எடுக்கப்பட்ட கீழ்க்காணும் நடவடிக்கைகளை அங்கீகரிக்கிறது.
காப்பீட்டு விரிவாக்கம் - (Scheme for Promoting Registration of Employers and Employees- SPREE) தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பதிவினை மேம்படுத்துவதற்கான திட்டம்
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதியில் 24 மாதங்களுக்கு பங்களிப்பு வீதங்கள் குறைப்பு மற்றும்
ESI சட்டத்தின் கீழ் காப்பீட்டுக்கான ஊதிய வரம்பை உயர்த்துதல்.