TNPSC Thervupettagam

ISSAR 2023 அறிக்கை

May 3 , 2024 77 days 174 0
  • இஸ்ரோவின், தற்போதைய விண்வெளி சூழ்நிலைகள் பற்றிய வருடாந்திர மதிப்பீடு ஆனது இந்திய விண்வெளி சூழ்நிலை மதிப்பீட்டு அறிக்கை (ISSAR) என்ற வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
  • விண்வெளியில் இயங்கும் குறுங்கோள்கள், வால் நட்சத்திரங்கள் மற்றும் விண்கற்கள், ஆற்றல் மற்றும் துகள்களின் ஓட்டம் மற்றும் செயற்கை விண்வெளிப் பொருள்கள் போன்ற இயற்கையான அமைப்புகளான விண்வெளிச் சொத்துக்கள் பல்வேறு சுற்றுச்சூழல் அபாயங்களால் பாதிக்கப்படக்கூடியவையாக உள்ளன.
  • இந்த அறிக்கையின்படி, அமெரிக்க விண்வெளிக் கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து, சுமார் 1,37,565 விண்வெளி பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும்  எனும் எச்சரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
  • மேலும், ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் நெருங்கிய அணுகுமுறைகளுக்கான மொத்தம் 3,033 விண்வெளி அமைப்புகள் புவியை நெருங்கி வர உள்ளதாக கூறப்படும் எச்சரிக்கைகள் இஸ்ரோ செயற்கைக்கோள்களால் வழங்கப்பட்டன.
  • இந்திய விண்வெளி செயல்பாடுகளின் சகாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையில் தனியார் நிறுவனங்கள்/கல்வி நிறுவனங்களால் மொத்தம் 127 இந்தியச் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளன.
  • 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று நிலவரத்தின் படி, செயல்பாட்டில் உள்ள அரசுக்குச் சொந்தமான செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை புவி தாழ்மட்டச் சுற்றுப் பாதையில் (Low Earth Orbit) 22 மற்றும் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் (Geo-synchronous Earth Orbit) 29 ஆக உள்ளது.
  • மேலும், சந்திரயான்-2 சுற்றுக்கலம், ஆதித்யா-L1 மற்றும் சந்திரயான்-3 கலத்தின் உந்து விசை அமைப்பு ஆகிய மூன்று இந்திய விண்வெளி ஆய்வுக் கலங்களும் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் செயல்பாட்டில் இருந்தன.
  • 2023 ஆம் ஆண்டின் இறுதி வரை மொத்தம் 21 இந்தியச் செயற்கைக்கோள்கள் மீண்டும் வளிமண்டலத்தில் செலுத்தப்பட்டன.
  • 2023 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 8 இந்தியச் செயற்கைக்கோள்கள் மீண்டும் வளி மண்டலத்தில் செலுத்தப்பட்டன.
  • இந்திய நாட்டினால் விண்ணில் ஏவப்பட்டவற்றுள் மொத்தம் 82 ஏவுகல பாகங்கள் 2023 ஆம் ஆண்டு வரை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்