மெக்ஸிகோவின் குவாடலஜாராவில் நடைபெற்ற ISSF (International Shooting Sport Federation) துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பையில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மனு பாகெர் தனது முதல் சர்வதேச அறிமுக உலக கோப்பையில் தங்கம் வென்றுள்ளார்.
மேலும் இப்போட்டியில் ஓம் பிரகாஷ் மிதர்வால் உடனான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி இரட்டையர் பிரிவில் மனு பாகர் இரு தங்கப் பதக்கங்களை இந்தியாவிற்கு வென்று தந்துள்ளார்.
16 வயதான மனு பாகெர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் மெக்ஸிகோவின் அலேஜான்ட்ரா ஜவாலா வஜ்குவெஜ்ஜை வீழ்த்தி இந்தியாவிற்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்று தந்துள்ளார்.
மொத்தம் இந்தியா ஏழு பதக்கங்களைப் பெற்று தற்போது ISSF உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் பதக்கப் பட்டியலில் முன்னிலையில் உள்ளது.