TNPSC Thervupettagam

ISSF-ன் துணைத் தலைவரான முதல் இந்தியர்

December 4 , 2018 2102 days 594 0
  • சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பின் (International Shooting Sport Federation-ISSF) துணைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியராக ரனிந்தர் சிங் ஆகியுள்ளார்.
  • இந்த தேர்தலானது முனீச்சில் நடைபெற்ற ISSF-ன் பொதுச்சபை கூட்டத்தில் நடத்தப் பட்டது.
  • 51 வயதான ரனிந்தர் தற்போது இந்திய தேசிய துப்பாக்கிச் சங்க கூட்டிணைவின் (National Rifle Association of India-NRAI) தலைவராக உள்ளார்.
  • அதே பொதுச்சபைக் கூட்டத்தில் ISSF-ன் 7-வது தலைவராக ரஷ்யாவின் விளாடிமிர் லிசின் என்பவரும் மற்றும் புதிய பொதுச் செயலாளராக அலெக்சாண்டர் ரத்தேர் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • மேலும் இந்திய துப்பாக்கி சுடும் வீரரும் 2008 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான அபினவ் பிந்ரா ISSF-ன் மிக உயர்ந்த சிறப்புமிக்க நீலப் பட்டை (ப்ளுகிராஸ்) அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • தற்போது வரை துப்பாக்கி சுடுதலில் ISSF-ன் மிக உயர்ந்த விருது பெற்ற முதல் இந்தியர் இவரேயாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்