மெக்ஸிகோ நாட்டின் குவாடாலஜாராவில் நடைபெற்ற ISSF (International Shooting Sport Federation - ISSF) உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் அகில் ஷியோரான் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3-Position போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு 4-வது தங்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
பெண்களுக்கான 50m ரைபிள் 3-positions போட்டியில் இந்தியாவின் அன்ஜீம் மவுட்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது இவரின் முதல் உலகக் கோப்பைப் பதக்கமாகும் .
4 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் ஒன்பது பதக்கங்களைப் பெற்று இந்தியா முதல் முறையாக ISSF உலகக் கோப்பைப் போட்டியின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.