சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடும் விளையாட்டுக் கூட்டமைப்பின் (International Shooting Sport Federation - ISSF) 2019 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய துப்பாக்கிச் சுடும் இணைகளான சவுரப் சவுத்ரி மற்றும் மானு பாக்கர் ஆகியோர் 10 மீட்டர் காற்று கைத் துப்பாக்கிச் சுடுதலின் கலப்புப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.
இதே போட்டித் தொடரில் 10 மீட்டர் காற்று துப்பாக்கிச் சுடுதலின் கலப்புக் குழுப் போட்டியில் அஞ்சும் மௌட்கில் மற்றும் திவ்யான்ஷ் சிங் பன்வார் ஆகியோர் இணைந்து சீனாவைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றனர்.
இதற்கு முன்பாக 2019 பிப்ரவரியில் நடைபெற்ற உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் டெல்லி பதிப்பில் சவுத்ரி மற்றும் பாக்கர் இணையானது இதே பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத் தக்கது.