- ஒன்பது தங்கம், ஐந்து வெள்ளி, எட்டு வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இந்தியா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வந்த ISSF ஜீனியர் உலகக் கோப்பைப் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
- ஒன்பது தங்கம், 8 வெண்கலம், 8 வெள்ளி என மொத்தம் 25 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- மூன்று தங்கப் பதக்கங்களுடன் இத்தாலி மூன்றாவது இடத்தில் உள்ளது.
- தங்கப் பதக்கத்தை வென்ற 4 நாடுகளுள் போட்டியை நடத்திய நாடான ஆஸ்திரேலியா ஓர் தங்கத்தை வென்று 4வது இடத்தில் உள்ளது.
இப்போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள்.
- தங்கப் பதக்கம் வென்றவர்கள் : அனிஷ், வளறிவன், இளவேனில், பகேர் மனு, முஷ்கான்,
- வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள் : ரானா கௌரவ்
- வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் : பபுதா அர்ஜூன், அன்மோல், கபூர் விவான், செகோன் கனெமத்.