16 வயதாகும் இந்தியரான விவான் கபூர் ISSF (International Shooting Sport Federation - ISSF) ஜீனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தன்னுடைய முதல் உலகக் கோப்பைப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இவர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் டிராப் பிரிவில் 30 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதே பிரிவில், அணிகளுக்கான போட்டியில் விவான் கபூர், லக்சய், அலி அமான் இலாகி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இத்தாலியை விட 4 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.