2023 ஆம் ஆண்டு ISSF ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியானது கொரியக் குடியரசில் நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டு ஜூனியர் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க சென்ற 90 துப்பாக்கி சுடும் வீரர்களைக் கொண்ட இந்திய வீரர்கள் குழுவானது மிகப்பெரியதாக உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் பங்கு பெற்ற மிகப்பெரிய குழு 66 பேர் கொண்ட கொரிய அணியாகும்.
இந்தப் போட்டியில் இந்திய அணியானது ஆறு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் என 17 பதக்கங்களை வென்றது.
இதில் ஏழு இந்தியர்கள் ஒன்றுக்கு மேற்பட்டப் பதக்கங்களை வென்றனர்.
இதில் சயின்யம் மூன்று பதக்கங்கள் வென்றார்.
இதில் அபினவ் ஷா மற்றும் கமல்ஜீத் ஆகியோர் தலா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் லிமா நகரில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 17 தங்கம் உட்பட 43 பதக்கங்களுடன் இந்திய அணி பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றது.