iTNT மையமானது அதன் அறக்கட்டளை சார் நிதியை (மேம்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் மிகவும் மாறுதல் மிக்க புத்தாக்கங்களை வெளிக் கொணரச் செய்வதற்கான நிதியியல் வாய்ப்புகள்) அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது, இந்தியா அரசின் ஆதரவுடன், முதல் தவணையாக 2 கோடி ரூபாய் ஆனது தமிழகத்தில் உள்ள மேம்பட்ட மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட உள்ளது.
இத்தகையப் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒரு துணிகர முதலீட்டிற்கு என சுமார் 40 லட்சம் ரூபாய் வரையில் iTNT நிதியுதவி வழங்கும்.