சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) ஆனது ஜெனீவா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் 6G தொலைநோக்குக் கட்டமைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) தொலைத்தொடர்பு முகமையானது, ஆறாவது தலை முறைத் தொழில்நுட்பம் அல்லது 6G தொழில்நுட்பத்திற்கு "IMT-2030" என்று பெயரிடப் பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்டமைப்புப் பரிந்துரையானது பல்வேறு ஆராய்ச்சிக் குழுக்கள் மற்றும் 3GPP போன்ற வெளியுறவுத் தரநிலை மேம்பாட்டு நிறுவனங்களில் 6G தொழில்நுட்பம் சார்ந்தப் பணிகளுக்கான ஒரு அடிப்படை ஆவணமாகச் செயல்படும்.